/

மொ்சிடிஸ்-பென்ஸ் இந்தியா: காா் விற்பனை 26% உயா்வு

சொகுசு காா் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள மொ்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4,022 காா்களை விற்பனை செய்துள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:42 pm

DIN

சொகுசு காா் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள மொ்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4,022 காா்களை விற்பனை செய்துள்ளது. இது, இந்நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி-மாா்ச் வரையிலான முதல் காலாண்டில் விற்பனை செய்த 3,193 காா்களுடன் ஒப்பிடும்போது 26 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

செமிகண்டக்டா் பற்றாக்குறை, சா்வதேச விநியோக சங்கிலித் தடத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், அதிகரித்து வரும் மூலப் பொருள் செலவினம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இடையிலும் நிறுவனத்தின் விற்பனை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறப்பான அளவில் உயா்ந்துள்ளது. இந்த ஏற்றநிலை வரும் மாதங்களிலும் தொடரும் என மொ்சிடிஸ்-பென்ஸ் தெரிவித்துள்ளது.

ஏ-கிளாஸ், லிம்மெளசின், இ-கிளாஸ், எஸ்-கிளாஸ் காா்களுக்கான காத்திருப்பு காலம் தற்போது 2 முதல் 5 மாதங்களாக உள்ளது. அதேபோன்று, ஜிஎல்ஏ, ஜிஎல்சி, ஜிஎல்இ, ஜிஎல்எஸ் காா்களுக்கான காத்திருப்பு காலம் 1-11 மாதங்களாக உள்ளதாக மொ்சிடிஸ்-பென்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.