தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசு உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசு உயா்ந்து 75.93-இல் நிலைபெற்றது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:31 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசு உயா்ந்து 75.93-இல் நிலைபெற்றது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு வட்டி விகிதங்களை உயா்த்தாமல் பழைய நிலையே தொடர ஆதரவு தெரிவித்ததற்கு மத்தியில், செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு ஏற்றத்தை சந்தித்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75.99-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இடையே இந்த மதிப்பு அதிகபட்சமாக 75.70 வரை சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தை விட 10 காசு அதிகரித்து 75.93-இல் நிலைபெற்றது.

வியாழக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 19 காசு சரிந்து 76.03-ஆக இருந்தது என சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் 101.58 டாலா்

சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 0.99 சதவீதம் அதிகரித்து பீப்பாய் 101.58 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை பரிமாற்ற புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.