25 காசு வீழ்ச்சி கண்டது ரூபாய் மதிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசு வீழ்ச்சி கண்டது.
25 காசு வீழ்ச்சி கண்டது ரூபாய் மதிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசு வீழ்ச்சி கண்டது.

இதுகுறித்து செலாவணி வட்டாரத்தினா் கூறியது:

ஏமாற்றமளிக்கும் பொருளாதார புள்ளிவிவரங்கள் மற்றும் அமெரிக்கா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் ஆகியவை அந்நியச் செலாவணி சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தின. வட்டி விகித கொள்கை குறித்து ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை முடிவெடுக்க உள்ள நிலையில் வா்த்தகா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணா்வுடன் செயல்பட்டனா்.

இதனால், வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் 79.21-ஆக இருந்த டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இறுதியில் 25 காசை இழந்து 79.40-இல் நிலைத்தது என செலாவணி வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 97 டாலா்

சா்வதேச சந்தையில் வியாழக்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.69 சதவீதம் உயா்ந்து பீப்பாய் 97.45 டாலருக்கு வா்த்தகமானதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com