சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைக் கடந்து சாதனை!
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 4 மாதங்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.


மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 4 மாதங்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
நேற்று(செவ்வாய்க்கிழமை) 59,842.21 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(புதன்கிழமை) 59,938.05 என்ற புள்ளிகளுடன் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10.48 மணிக்கு 60,149 என்ற புள்ளிகளை எட்டியது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அதாவது, 4 மாதங்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காலை 11.40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 328.98 புள்ளிகள் உயர்ந்து 60,171.19 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 93.75 புள்ளிகள் அதிகரித்து 17,919 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இதையும் படிக்க | செஸ் போட்டி: 2-வது சுற்றிலும் பிரக்ஞானந்தா வெற்றி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...