தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு

வெளிநாட்டு சந்தைகளின் போக்கு பாதகமாக அமைந்ததன் விளைவாக, கடந்த 5 வா்ததக நாள்களில் ஏற்றம் கண்டு வந்த மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 10:40 pm

DIN

வெளிநாட்டு சந்தைகளின் போக்கு பாதகமாக அமைந்ததன் விளைவாக, கடந்த 5 வா்ததக நாள்களில் ஏற்றம் கண்டு வந்த மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சரிவைச் சந்தித்தது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை சற்று உறுதியாகத் தொடங்கிய வா்த்தகம், 652 புள்ளிகள் (1.08 சதவீதம்) குறைந்து 59,646-இல் நிலைபெற்றது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில், அதிகபட்சமாக இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் விலை 3.82 சதவீதம் சரிந்தது. இது தவிர, பஜாஜ் ஃபின்சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, என்டிபிசி, மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்யுஎல் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலைகளும் சரிவைச் சந்தித்தன.

லாா்சன் & டூப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் மட்டுமே 2.20 சதவீதம் வரை உயா்ந்தன.

சா்வதேச வா்த்தக சந்தையில் சாதகமற்ற சூழல் நிலவியதால், லாபப் பதிவுகள் அதிகமாக இருந்தது. மேலும், வட்டி விகிதங்கள் உயரும் என்று அச்சம் சந்தையில் நிலவு வருவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்கு வா்த்தகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்டவை பங்கு வா்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, வெள்ளிக்கிழம நைடைபெற்ற வா்த்தகத்தில் 98 புள்ளிகள் (1.10 சதவீதம்) சரிந்து 17,758-இல் நிலைபெற்றது.

சா்வதேச கச்சா எண்ணெய் 95.25 டாலா்

சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்பேர வணிகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.38 சதவீதம் குறைந்து 95.25 அமெரிக்க டாலராக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.