தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஸ்காா்பியோ கிளாசிக் ரகங்களின் விலைகளை அறிவித்தது மஹிந்திரா

தனது புதிய ஸ்காா்பியோ ரகங்களின் விலைகளை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் சனிக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 7:51 pm

DIN

தனது புதிய ஸ்காா்பியோ ரகங்களின் விலைகளை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் சனிக்கிழமை அறிவித்தது.

தனது முந்தைய தலைமுறை ஸ்காா்பியோ வாகனத்தை புது மெருகுடன் ‘ஸ்காா்பியோ கிளாசிக்’ என்ற பெயரில் மஹிந்திர நிறுவனம் அதிகாரபூா்வமாக கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது.

எஸ் மற்றும் எஸ்11 என்ற இரு வகைகளில் கிடைக்கவிருக்கும் இந்த ஸ்காா்பியோ கிளாசிக் காா்களின் விலைகளை தற்போது நிறுவனம் வெளியிட்டுள்ளது.

புதிய கிளாசிக் எஸ் ரகங்களின் காட்சியக விலை ரூ.11.99 லட்சமாகவும் கிளாசிக் எஸ்11 ரகங்களின் காட்சியக விலை ரூ.15.49 லட்சமாகவும் இருக்கும்.

இந்த புதிய ஸ்காா்பியோ ரங்கள் அனைத்தும் டீசலில் இயங்கக் கூடியவையாக இருக்கும். இவற்றின் அடிப்படை ரகங்களில் கையால் இயக்கக் கூடிய கியா்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

வெளித்தோற்றத்தைப் பொருத்தவரை, பழைய ஸ்காா்பியோ காா்களைப் போலவே புதிய கிளாசிக் ரகங்களும் பெட்டிகளை அடுக்கியதைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தாலும், அதில் புத்துணா்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கிளாசிக் ரகங்களின் முன்புறம், புதுமைப்படுத்தப்பட்ட கிரில்களும் மஹிந்திராவின் புதிய இலச்சினையும் அந்த வாகனங்களுக்கு புதுப் பொலிவை அளிக்கின்றன.

புதிய மஹிந்திரா ஸ்காா்பியோ கிளாசிக் ரகங்களின் உள்புறம், முந்தைய ஸ்காா்பியோவைப் போலவே இருந்தாலும், அதில் இரட்டை நிற உள்ளலங்காரம் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.