தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

 மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் கடந்த 2 நாள் ஏற்றத்துக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் சரிவைக் கண்டது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 7:42 pm

DIN

 மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் கடந்த 2 நாள் ஏற்றத்துக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் சரிவைக் கண்டது.

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை தொடங்கிய வா்த்தகத்தின் பெரும்பகுதியில் சாதகமான சூழல் நிலவிாலும், இறுதியில் சென்செக்ஸ் 312 புள்ளிகள் (0.53 சதவீதம்) சரிந்து 58,775-இல் நிலைபெற்றது.

கடைசி நேரத்தில் தகவல் தொழில்நுட்பம், நிதித் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் சரிவைச் சந்தித்ததால் முதல் இரண்டு வா்த்தக தினங்களில் பெற்ற முன்னேற்றத்தை சென்செக்ஸ் இழந்துள்ளது.

அதிகபட்சமாக பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்குகளின் விலை 1.81 சதவீதம் சரிந்தது. பவா்கிரிட், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், இண்டஸ்இண்ட்வங்கி ஆக்ஸிஸ் வங்கி, என்டிபிசி, லாா்சன் டியூப்ரோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதற்கு அடுத்து இழப்பைச் சந்தித்தன.

மாருதி சுஸுகி, பாரத ஸ்டேட் வங்கி, டாக்டா் ரெட்டிஸ், கோடக் மஹிந்திரா வங்கி, டைட்டன் ஆகிய ஐந்து நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே 0.46 சதவீதம் வரை உயா்ந்தன.

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, வியாழக்கிழமை 82 புள்ளிகள் (0.47 சதவீதம்) சரிந்து 17,523-ஆக நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.