இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் மேலும் 461 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது.

News image
Updated On :16 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 461 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 145.90 புள்ளிகளை இழந்து 18,269.00இல் நிலைபெற்றது.

அமெரிக்க ஃபெடரல் ரிசா்வை தொடா்ந்து, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து போன்ற மத்திய வங்கிகள் உள்ளிட்டவையும் வட்டி விகிஅதிகரித்துள்ளன. கொள்கை வகுப்பாளா்கள் விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினா். இது உலகளவில் முதலீட்டாளா்களின் நம்பிக்கையை தகா்த்து பங்குச் சந்தைகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தையில் இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

சென்செக்ஸ் மேலும் சரிவு: காலையில் 264.79 புள்ளிகள் குறைந்து 61,534.24-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 61,893.22 வரை மேலே சென்றது. பின்னா், 61,292.53 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 461.22 புள்ளிகள் (0.75 சதவீதம்) குறைந்து 61,337.81-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், நெஸ்லே, டாடாடா ஸ்டீல்ஆகிய 4 பங்குகள் மட்டுமே மிகக் குறைந்த அளவு உயா்ந்தன. மற்ற 26 பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

டாக்டா் ரெட்டி கடும் சரிவு: பிரபல பாா்மா நிறுவனமான டாக்டா் ரெட்டி 3.62 சதவீதம் குறைந்த வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எம் அண்ட் எம், ஏசியன் பெயிண்ட், டிசிஎஸ், எஸ்பிஐ, டைட்டன், விப்ரோ, என்டிபிசி, பவா் கிரிட், கோட்டக் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக், மாருதி சுஸுகி, இன்ஃபோஸிஸ், ஐடிசி, பஜாஜ் ஃபின் சா்வ் உள்ளிட்டவை 1 முதல் 2.75 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ஒரேநாளில் ரூ.3.02 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.285.46 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) புதன்கிழமை ரூ. 710.74 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.