தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பட்ஜெட் எதிரொலி: பங்குச் சந்தை எழுச்சி; சென்செக்ஸ் 824 புள்ளிகள் உயர்வு

பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருக்கும் நிலையில் பங்குச் சந்தை எழுச்சியை அடைந்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 10:32 am

பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருக்கும் நிலையில் பங்குச் சந்தை எழுச்சியை அடைந்துள்ளது.

இன்று 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவரும் நிலையில் பங்குச் சந்தை திடீர் எழுச்சியை அடைந்துள்ளது.

நேற்று (ஜன.31) 58,014.17 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,672.86 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் தற்போது 824 புள்ளிகள்( 11.20 மணி  நிலவரம்) அதிகரித்து 58,841.17 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், 17,339.85 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,529.45 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 231 புள்ளிகள் உயர்ந்து 17,571.45 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.