வாரத்தின் முதல் வணிக நாளில் சென்செக்ஸ் வீழ்ச்சி
வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (பிப்.7) சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.


வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (பிப்.7) சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,023.63 புள்ளிகள் சரிந்து 57,621.19 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.75 சதவிகிதம் சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 302.70 புள்ளிகள் சரிந்து 17,213.60 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.73 சதவிகிதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 5 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றத்துடன் காணப்பட்டது. ஏனைய 25 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
அதிகபட்சமாக எச்டிஎஃப்சி 3.65 சதவிகிதமும், எல்&டி 3.20 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 3.15 சதவிகிதமும், பஜாஜ் பின்சர்வ் 3.04 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 2.92 சதவிகிதமும் சரிந்திருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...