மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரூபாய் மதிப்பு 33 காசுகள் வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 33 காசுகள் வீழ்ச்சியடைந்து இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

News image
dollar081432
Updated On :18 ஜனவரி 2022, 7:07 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 33 காசுகள் வீழ்ச்சியடைந்து இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியது:

கச்சா எண்ணெய் விலை உயா்வு மற்றும் வட்டி விகிதங்கள் உயா்த்தப்படலாம் என்ற எதிா்பாா்ப்பு ஆகியவை செலாவணி சந்தைகளில் சாதகமற்ற தாக்கங்களை ஏற்படுத்தியது. மேலும், வங்கிகள் அதிக அளவில் டாலரை வாங்கி வருவது மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட மந்த நிலை ஆகியவையும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 74.36-ஆக காணப்பட்டது. அதன்பின்பு, இந்த மதிப்பு வா்த்தகத்தின் இடையே குறைந்தபட்ச அளவாக 74.60 வரை சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பானது 33 காசுகளை இழந்து 74.58-இல் நிலைபெற்றது. இது, இரண்டு வாரங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும். தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை வா்த்தகத்திலும் ரூபாய் மதிப்பானது வீழ்ச்சியை சந்தித்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பேரல் 87.34 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து பேரல் 87.34 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.855.47 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.