தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தொடர் சரிவில் கிரிப்டோகரன்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்த கிரிப்டோகரன்சி வணிகம் சமீப காலமாக தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.

News image

தொடர் சரிவில் கிரிப்டோகரன்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Updated On :22 ஜனவரி 2022, 11:20 am

உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்த கிரிப்டோகரன்சி வணிகம் சமீப காலமாக தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.

கிரிப்டோகரன்சி எனப்படும் ’விர்சுவல் வணிகம்’ உலகம் முழுவதும் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. அடையாளம் தெரியாத நபர்களால் உருவாக்கப்பட்ட இந்த கரன்சிகள் இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவிலும் பெரிய அளவில்  அதிக முதலீடுகளைப் பெறத் தொடங்கியது.

முன்னதாக நாட்டில் 1.5 கோடி பேர் பல நாணயங்களிலும் பிட்காயின் போன்றவற்றிலும் கிட்டத்தட்ட 10,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கிரிப்டோகரன்சி வணிகம் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. பெரிய நாணயங்களாகக் கருதப்படும் பிட்காயின், எத்திரியம் போன்றவைகளின் மதிப்புகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

பலரும் பதற்றத்தில் கடுமையான நஷ்டத்திலேயே தங்கள் முதலீடுகளை விற்று வரும்  நிலையில் பிட்காயின் 40 லட்சத்திலிருந்து சில நாள்களிலேயே  29 லட்சம் வரை கீழ் இறங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல ஒவ்வொரு கிரிப்டோகரன்சிகளின் விலையும் முன் எப்போதும் இல்லாத சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இருப்பினும் இந்தியாவில் கிரிப்டோ வணிகத்தை ஒருங்கிணைக்கும் செயலிகள் தங்களுடைய முதலீட்டாளர்களிடம்  யாரும் பதற்றத்தில் முதலீடுகளை விற்க வேண்டாம் என அறிவுரை வழங்கி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.