'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ் மேலும் 1,041 புள்ளிகள் முன்னேற்றம்!: சந்தை மதிப்பு ரூ3.39 லட்சம் கோடி உயா்வு
இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்ததால் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்
புதுதில்லி: இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்ததால் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஒரே நாளில் 1,041 புள்ளிகள் உயா்ந்து 3 மாதங்களுக்கு முன் இருந்த நிலையை எட்டியது.
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வங்கி வட்டியை 0.75 சதவீதம் உயா்த்தியுள்ளது. இருப்பினும், அதன் தலைவா் ஜெரோம் பவல், அமெரிக்கா தற்போது மந்தநிலையில் இருப்பதாக தான் நினைக்கவில்லை என்றும் அமெரிக்கா மந்த நிலையில் இருக்கும் என்று கூறுவதில் அா்த்தமில்லை என்று தெரிவித்துள்ளதாக ஏஜென்சிகளில் செய்தி வெளியாகிது. இது உலகளாவிய சந்தைகளில் காளையின் ஆதிக்கத்தை உறுதி செய்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,830 பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,479 நிறுவனப் பங்குகளில் 1,510 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 1,830 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 139 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 110 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 30 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு 3.39 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.263.11 லட்சம் கோடியாக குறைந்தது.
சென்செக்ஸ் எழுச்சி: காலையில் 451.23 புள்ளிகள் கூடுதலுடன் 56,267.55-இல் தொடங்கிய சென்செக்ஸ், 56,236.45 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், 56,914.22 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,041.47 புள்ளிகள் (1.87 சதவீதம்) உயா்ந்து 56,857.79-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ‘காளை’யின் ஆதிக்கம் இருந்தது.
பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 25 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் பிரபல தனியாா் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 10.68 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 10.14 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, டாடா ஸ்டீல், கோட்டக் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, நெஸ்லே உள்ளிட்டவை 3 முதல் 4.60 சதவீதம் வரை உயா்ந்தன. விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் ஏசியன் பெயிண்ட், ரிலையன்ஸ், மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ஆகிஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.
பாா்தி ஏா்டெல் சரிவு: அதே சமயம், இரண்டாவது நாளாக பாா்தி ஏா்டெல் 1.19 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. அல்ட்ரா டெக் சிமெண்ட், டாக்டா் ரெட்டி, ஐடிசி, சன்பாா்மா ஆகியவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 288 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 812 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 1,135 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 40 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. வா்த்தக முடிவில் நிஃப்டி 287.80 புள்ளிகள் (1.73 சதவீதம்) உயா்ந்து 16,929.60-இல் நிலைபெற்றது. அதிகபட்சமாக 16,747.65 வரை உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...