டாக்டர் ரெட்டீஸ் லேப் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 21 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேப் 3 சதவீதம், ரிலையன்ஸ் 2.73 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, பார்தி ஏர்டெல், சன்பார்மா, டெக் மஹிந்திரா,கோட்டக் பேங்க், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஐடிசி உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், டிசிஎஸ், மாருதி சுஸூகி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.