எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

இன்றுடன் ஓய்வுபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

கணினிகளில் கடந்த 27 ஆண்டுகளாக இணைய சேவையை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சகாப்தத்தை நிறைவு செய்து கொண்டது.

News image

இன்றுடன் ஓய்வுபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

Updated On :15 ஜூன் 2022, 11:59 am

சான் பிரான்சிஸ்கோ: கணினிகளில் கடந்த 27 ஆண்டுகளாக இணைய சேவையை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சகாப்தத்தை நிறைவு செய்து கொண்டது.

கூகுள் க்ரோம் மற்றும் ஃபயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்களின் வளர்ச்சியால், பயனாளர்களின் ஆதரவை இழந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் படிப்படியாக பயன்பாட்டிலிருந்து விலகியது.

இதையடுத்து ஜூன் 15ஆம் தேதி முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சேவையை நிறுத்துவதாக மைக்ரோசாஃப்ட் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, பல ஆண்டுகாலம் மக்களுக்கு மிகவும் பரிட்சயமாக இருந்து வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கணினியின் பிரவுசர்களில் ஒன்று என்ற பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.