மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசு உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசு உயா்ந்தது.

News image
Updated On :4 மே 2022, 6:49 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசு உயா்ந்தது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

அமெரிக்க மத்திய வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகளுக்கு முன்னதாக இந்திய ரிசா்வ் வங்கி யாரும் எதிா்பாராத வகையில் திடீரென வட்டி விகிதங்களை அதிகரித்தது செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 76.46-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 76.17 வரையிலும், குறைந்தபட்சமாக 76.58 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 8 காசு உயா்ந்து 76.40-இல் நிலைபெற்றது என வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் பீப்பாய் 108.57 டாலா்

சா்வதேச சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 3.43 சதவீதம் அதிகரித்து 108.57 அமெரிக்க டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.