அலுவலகத்துக்கு 7.30 மணி நேரம் தாமதமாக வந்த ஊழியர்: வைரலாகும் காரணம்!

ஊழியர் ஒருவர் அலுவலகத்திற்கு 7.30 மணிநேரம் தாமதமாக வந்ததற்கு அவர் கூறிய காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read


ஊழியர் ஒருவர் அலுவலகத்திற்கு 7.30 மணிநேரம் தாமதமாக வந்ததற்கு அவர் கூறிய காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்  5 - 10 நிமிடங்கள் தாமதமாக செல்வது பெரும்பாலும் வாடிக்கையானதுதான். அதிகபட்சம் ஒருமணிநேரம் தாமதமாக செல்ல வாய்ப்புண்டு. 

ஆனால் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்திற்கு 7.30 மணி நேரம் தாமதமாக சென்றுள்ளார். அலுவலகத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் அதற்கான காரணம் கேட்டபோது, தான் தூங்கிவிட்டதாகக் கூறி மன்னிப்புகோரியுள்ளார். 

இந்த காரணைத்தைக் கேட்ட அலுவலகத்தில் உள்ளவர்கள் அனைவருமே சிரித்துள்ளனர். எனினும் அவரது நேர்மையை அலுவலக ஊழியர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். 

டியான்னோ என்பவர் பணிபுரியும் அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு இணையவாசிகள் கருத்துக்களை கேலியாக பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com