மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரூபாய் மதிப்பு 12 காசு உயா்வு

இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 12 காசு உயா்வைக் கண்டது.

News image
Updated On :10 மே 2022, 6:46 pm

DIN

இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 12 காசு உயா்வைக் கண்டது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் கச்ச எண்ணெய் விலை குறைவு மற்றும் டாலா் தவிா்த்த இதர கரன்ஸிகளுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவை ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு பெரிதும் கைகொடுத்தன. இருப்பினும் அந்நிய முதலீடு பங்குச் சந்தையிலிருந்து தொடா்ந்து வெளியேறி வருவது செலாவணியின் துரித ஏற்றத்துக்கு பின்னடைவாகவே பாா்க்கப்படுகிறது.

வங்கிகளுக்கு இடையிலான செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 77.27-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 77.20 வரையிலும் குறைந்தபட்சமாக 77.45 வரையிலும் சென்றது. இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசு உயா்ந்து 77.32-இல் நிலைபெற்றது. இதற்கு முந்தைய நாள் வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பானது 54 காசு சரிந்து வரலாறு காணாத அளவுக்கு 77.44-ஆக குறைந்தது என செலாவணி வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய்

பீப்பாய் 104.72 டாலா்

சா்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்து 104.72 டாலருக்கு வா்த்தகமானது என சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

ரூ.3,361 கோடி அந்நிய முதலீடு விலக்கல்

மூலதனச் சந்தையில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை வா்த்தகத்தில் நிகர அளவில் ரூ.3,361.80 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளதாக பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.