ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 49 புள்ளிகள் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.


இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 49 புள்ளிகள் குறைந்தது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், காலையில் உள்நாட்டுச் சந்தையில் பங்குகளை வாங்குவதற்கு வரவேற்பு இருந்தது. ஆனால், வர்த்தக நேர முடிவில் எஃப்எம்சிஜி, ஐடி, வங்கிப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. சந்தையில் நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தது.
மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், காலையில் 39.38 புள்ளிகள் கூடுதலுடன் 59,285.36 புள்ளிகள் தொடங்கி, அதிகபட்சமாக 59,566.67 வரை உயர்ந்தது.
பின்னர், 58,974.26 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 48.99 புள்ளிகளை இழந்து 59,196.99-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 390 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது.
சந்தை மூலதன மதிப்பு ரூ.54 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.280.36 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை அன்று ரூ.811.75 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர். சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் விலை குறைந்தன. இதில் பார்தி ஏர்டெல் 2.79 சதவீதம், என்டிபிசி 2.56 சதவீதம் உயர்ந்து அதிகம் விலை உயர்ந்த பட்டியலில் இருந்தன. மேலும், டாடா ஸ்டீல் ரிலையன்ஸ், பவர் கிரிட், டாக்டர் ரெட்டி உள்ளிட்டவையும் ஏற்றம் பெற்றன. அதே சமயம், பிரபல தனியார் நிதிநிறுவனமான பஜாஜ் ஃபின்சர்வ் 2.31 சதவீதம் குறைந்து அதிகம் வீழ்ச்சி கண்டது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யுனி லீவர், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம் உள்ளிட்டவை 1 முதல் 1.20 சதவீதம் வரை விலை குறைந்தன.
நிஃப்டி 10 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 918 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,054 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 29 பங்குகள் விலை குறைந்தன. காலையில் 30 புள்ளிகள் கூடுதலுடன் 17,695.70-இல் தொடங்கிய நிஃப்டி, வர்த்தக முடிவில் 10.20 புள்ளிகளை இழந்து 17,655.60-இல் நிலைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...