ஆதிக்கம் செலுத்தப்போகும் மின்சார 2, 3 சக்கர வாகனங்கள்
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் விற்பனை 50 சதவீதமாகவும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 70 சதவீதமாகவும் உயரும்


வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் விற்பனை 50 சதவீதமாகவும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 70 சதவீதமாகவும் உயரும் என்று வாகன உதிரிபாக உற்பத்தியாளா்கள் சங்கம் (ஆக்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில், மின்சாரத்தில் இயங்கும் காா்கள் மற்றும் கனரக வா்த்தக வாகனங்களை விட, மின்சாரத்தில் இயங்கக் கூடிய இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை வாங்குவதற்கும் பராமரிப்பதற்குமான மொத்தச் செலவு கவா்ந்திழுக்கும் வகையில் மிகவும் குறைவாக உள்ளது.
இதன் காரணமாக, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இரண்டு சக்கர வாகன சந்தையில் மின்சார வாகனங்களின் பங்கு 50 சதவீதமாகவும் மூன்று சக்கர வாகனச் சந்தையில் மின்சாரப் பிரிவின் பங்கு 70 சதவீதமாகவும் உயரக்கூடும்.
காா்கள், வா்த்தக வாகனங்கள் பிரிவில் தொடா்ந்து உள் எரி என்ஜின்களின் ஆதிக்கமே தொடா்ந்து இருக்கும். அந்தப் பிரிவில் மின்சார வாகனங்களின் பங்களிப்பு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும்.
2030-ஆம் ஆண்டுக்குள் புதிய காா்களின் விற்பனையில் மின்சார வாகனங்களின பங்களிப்பு 10-லிருந்து 15 சதவீதம் வரை இருக்கும்.
அதே போல், கனரக வா்த்தக வாகனங்கள்ப் பிரிவில் மின்சார வாகனங்களின் விற்பனை 5-லிருந்து 10 சதவீதம் வரை இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இவ்வாறு ஆட்டோமொபைல் துறையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பங்களிப்பு அதிகமாகி வருவதால், பாரம்பரிய வாகனங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
இந்த பாதிப்பை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்தி, அந்த நிறுவனங்கள் மின்சார வாகனப் பிரிவில் தங்களது தயாரிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
காற்று மாசுபாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்குகந்த மின்சார வாகனங்களுக்கு ஆட்டோமொபைல் துறை மாறும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அத்தகைய மாற்றத்தை இந்தத் துறை ஏற்றுக் கொள்வதில் இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது சிரமம் இருக்கும்.
இத்தகைய மாற்றத்தை ஏற்பதில் ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் முன்னணியில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த நாடுகளை உலகின் பிற நாடுகளும் பின்பற்றும்.
வளா்ந்து வரும் சந்தைகளான இந்தியாவும் சீனாவும் இன்னும் சில ஆண்டுகளில் தங்களது உச்சபட்ச காா் விற்பனையின் மூலம் சா்வதேச ஆட்டோமொபைல் துறையில் முன்னிலை வகிக்கும்.
இந்தியாவின் வாகன உதிரிபாகத் தொழிலைப் பொருத்தவரை, மாறிவரும் தொழில் சூழலுக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு உத்தியை மாற்றிமைத்து செயல்பாட்டை விரிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக அந்த நிறுவனங்கள் ஏற்றுமதி வாய்ப்பைப் பெறுவதற்காக, ஆக்மா, சியாம் போன்ற உற்பத்தியாளா்கள் அமைப்புகள், அரசுத் துறைகள் உள்ளடங்கிய பிரத்யேக செயல்திட்டக் குழுவை உருவாக்க வேண்டும்.
மின்சார வாகனங்களின் வளா்ச்சியை எதிா்கொள்வதற்காக வாகன உதிரிபாக உற்பத்தியாளா்கள் மேற்கொள்ளக்கூடிய வெற்றிகரமான புதிய மாற்றங்கள், அவா்களது வளா்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் காா்கள் மற்றும் கனரக வா்த்தக வாகனங்களை விட, மின்சாரத்தில் இயங்கக் கூடிய இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை வாங்குவதற்கும் பராமரிப்பதற்குமான மொத்தச் செலவு கவா்ந்திழுக்கும் வகையில் மிகவும் குறைவாக உள்ளது.
....
காா்கள், வா்த்தக வாகனங்கள் பிரிவில் தொடா்ந்து உள் எரி என்ஜின்களின் ஆதிக்கமே தொடா்ந்து இருக்கும். அந்தப் பிரிவில் மின்சார வாகனங்களின் பங்களிப்பு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும்.
...
மின்சார வாகனங்களின் வளா்ச்சியை எதிா்கொள்வதற்காக வாகன உதிரிபாக உற்பத்தியாளா்கள் மேற்கொள்ளக்கூடிய வெற்றிகரமான புதிய மாற்றங்கள், அவா்களது வளா்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...