
உற்பத்தி செலவு அதிகரித்ததன் எதிரொலியாக வணிக பயன்பாட்டிற்கான
வாகனங்கள் விலையை வரும் ஜூலை முதல் உயர்த்த டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாகனங்களின் மாடல் மற்றும் வகைக்கு ஏற்ப 1.5 முதல் 2.5 சதவிகிதம் வரை வாகனங்களின் விலை உயரும் எனவும் டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உற்பத்தி பொருள்களின் விலை, பல்வேறுகட்ட உற்பத்தி செலவு ஆகியவை உற்பத்தி செலவை கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் வாகனங்களின் விற்பனை விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
படிக்க | கரோனா பரவல்: ஐஐடி ஆகிறதா சென்னை மருத்துவக் கல்லூரி?
கடந்த சில நாள்களாக வாகன உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் இதர பொருள்களும் விலையுயர்வை சந்தித்துள்ளன.
3,400 கோடி மதிப்புள்ள டாடா நிறுவனத்தில் கார், லாரி, பேருந்து மற்றும் இதர வணிக பயன்பாட்டு வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...