ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! ஒரு டாலர் - ரூ. 83.15

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! ஒரு டாலர் - ரூ. 83.15

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. 

கடந்த சில வாரங்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. 

வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன. 

இந்நிலையில், நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு 82.36 ஆக இருந்த நிலையில் நேற்று(புதன்கிழமை) காலை 82.30 ஆகக் குறைந்தது. 

பின்னர் நேற்று(புதன்கிழமை) வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு 83.02 ஆக மேலும் சரிந்து, முதல்முறையாக 83 ரூபாய்க்கும் மேல் சென்றது. 

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய பின்னர் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 83.15 ஆகக் குறைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வரலாறு காணாத வீழ்ச்சி இதுவாகும். 

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 79.87 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com