கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 20% வீழ்ச்சியுடன் வணிகம்

அதானி குழுமத்தின், அதானி என்டர்பிரைசஸ் பங்குகள், பிப்ரவரி 3ஆம் தேதி காலை வணிகம் தொடங்கியதும் 35 சதவிகித வீழ்ச்சியை சந்தித்தது. பிறகு முற்பகல் வணிகத்தின்போது இது 20 சதவிகிதமாக இருந்தது.

News image
அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 20% வீழ்ச்சியுடன் வணிகம்
Updated On :3 பிப்ரவரி 2023, 7:41 am

DIN


அதானி குழுமத்தின், அதானி என்டர்பிரைசஸ் பங்குகள், பிப்ரவரி 3ஆம் தேதி காலை வணிகம் தொடங்கியதும் 35 சதவிகித வீழ்ச்சியை சந்தித்தது. பிறகு முற்பகல் வணிகத்தின்போது இது 20 சதவிகிதமாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் கூடுதல் கண்காணிப்பு அளவீட்டு கட்டமைப்பின் கீழ் அதானி என்டர்பிரைசஸ் வைக்கப்பட்டதுக்கு அடுத்த நாளே இந்த வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

இன்று காலை தேசிய பங்கச் சந்தை தொடங்கியதும் அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 35 சதவிகித வீழ்ச்சியுடன் ரூ.1,017.45க்கு வணிகமானது. இதுவரை அதானி என்டர்பிரைசஸ் சந்திக்காத மிக மோசமான வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது. இந்த பங்குகள் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 76 சதவீத உயர்வுடன் ஒரு பங்கு ரூ.4,190க்கு விற்பனையானது இங்கே நினைவுகூரத்தக்கது.

ஜனவரி 24ஆம் தேதிக்குப் பிறகு இன்று காலை வரை அதானி என்டர்பிரைசஸ் 60 சதவிகிதமும், அதானி கிரீன் எனர்ஜி 51 சதவிகிதமும் அதானி டோட்டல் கேஸ் 58 சதவிகிதமும் அதானி டிரான்ஸ்மிஷன் 50 சதவீதமும் விலை சரிந்தன.

ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 7வது நாளாக இன்று அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் தொடர் வீழ்ச்சியை சந்தித்து இதுவரை 117 பில்லியன் டாலர் அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இது அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட பாதியளவு என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆசியாவின் பணக்காரா்கள் பட்டியில் முதலிடம் வகித்து வந்த கெளதம் அதானி, அந்த இடத்தை இழந்தாா். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.