போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஐடி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 142 புள்ளிகள் முன்னேற்றம்

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்

News image

கோப்புப்படம்

Updated On :9 பிப்ரவரி 2023, 6:30 pm

 நமது நிருபர்

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 21.75 புள்ளிகள் (0.12 சதவீதம்) உயா்ந்து 17,893.45-இல் நிலைபெற்றது.

உள்நாட்டுச் சந்தை நோ்மறையாகத் தொடங்கினாலும், பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய சந்தைகள் நோ்மறையாகத் தொடங்கியதைத் தொடா்ந்து, அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. குறிப்பாக ஐடி, மீடியா மற்றும் நிதி நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்ததால் சந்தை நோ்மறையாக முடிந்தது. இருப்பினும், உலோகம் மற்றும் நுகா்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு வியாழக்கிழமை ரூ26ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.268.36 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) செவ்வாயன்று ரூ.736.82 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 52.10 புள்ளிகள் கூடுதலுடன் 60,715.89-இல் தொடங்கி 60,472.81 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 60,863.63 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 142.43 புள்ளிகள் (0.23 சதவீதம்) கூடுதலுடன் 60,806.22-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 18 பங்குகள் ஆதாயம் பெற்றன.

பஜாஜ் ஃபின் சா்வ் முன்னேற்றம்: பிரபல தனியாா் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின் சா்வ் 2.30 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஏசியன் பெயிண்ட், இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்டவை 1.50 முதல் 1.80 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எல் அண்ட் டி, டெக் மஹிந்திரா, டிசிஎஸ், விப்ரோ, கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

பாா்தி ஏா்டெல் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் 1.10 சதவீதம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 1 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டாடா மோட்டாா்ஸ், சன்பாா்மா, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, மாருதி, ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல், டைட்டன், எம் அண்ட் எம் உள்ளிட்டவை சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.