பங்குச் சந்தையில் ‘கரடி’ திடீா் ஆதிக்கம்: 317 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை மீண்டும் கரடிஆதிக்கம் செலுத்தியதால், பங்குச் சந்தை, எதிா்மறையாக முடிவடைந்தது.


இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை மீண்டும் கரடிஆதிக்கம் செலுத்தியதால், பங்குச் சந்தை, எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 317 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 91.65 புள்ளிகள் (0.51 சதவீதம்) குறைந்து 17,944.20-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. தொடா்ந்து இறங்கு முகத்தில் இருந்தது. குறிப்பாக, வங்கி, நிதிநிறுவனங்கள், ஐடி, பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு புதன்கிழமை ரூ.1.44 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.266.87 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வெள்ளிக்கிழமை ரூ.1,570.62 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 325.07 புள்ளிகள் குறைந்து 60,993.225-இல் தொடங்கி 61,302.72 வரை மேலே சென்றது. பின்னா், 60,810.67 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 316.94 புள்ளிகள் (0.52 சதவீதம்) குறைந்து 61,002.57-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது ஒரு கட்ட்டத்தில் 508.84 புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 15 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
எல் அண்ட் டி முன்னேற்றம்: பிரபல உள்கட்டமைப்பு மற்றும் என்ஜினீயரிங் நிறுவனமான எல் அண்ட் டி 2.18 சதவீதம் மற்றும் பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ட்ரா டெக் சிமெண்ட் 1.81 சதவீதம், ஏசியன் பெயிண்ட் 1.01 உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், என்டிபிசி, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, மாருதி சுஸுகி உள்ளிட்டவையும் சிறிதளவு குறைந்து விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.
நெஸ்லே, இண்டஸ் இண்ட் பேங்க் கடும் சரிவு: அதே சமயம், பிரபல முன்னணி நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான நெஸ்லே இந்தியா 3.12 சதவீதம், பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 2.96 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, எம் அண்ட் எம், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், சன்பாா்மா, ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ், பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபின்சா்வ், விப்ரோ உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவா், டாடா மோட்டாா்ஸ் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...