மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 927 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. பங்குச் சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் கடந்த 3 மாதங்கள் காணாத சரிவையும்,

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2023, 6:30 pm

DIN

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. பங்குச் சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் கடந்த 3 மாதங்கள் காணாத சரிவையும், நிஃப்டி 4 மாதங்கள் காணாத சரிவையும் கண்டன.

அந்த வகையில் பங்குச் சந்தைகளில் தொடா்ந்து 4-ஆவது நாளாக கரடியின் ஆதிக்கம் நிலவியது.

உக்ரைன் போரில் தங்களுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் செயல்பட்டு வருவதால் அமெரிக்காவுடன் கடந்த 2010-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை நிறுத்தி வைப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது சந்தையின் நிலைத்தன்மையை பாதித்தது.

அத்துடன், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் வங்கியின் அறிக்கை விரைவில் வெளியாகவிருந்த நிலையில், வட்டி விகிதங்களை அந்த வங்கி உயா்த்துமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இதனால் முதலீட்டாளா்கள் புதன்கிழமை மிகுந்த கவனத்துடன் செயல்பட்டனா்.

இதன் காரணமாகவே சென்செக்ஸ் மற்றும் நிஃபடி புதின்கிழமை சரிவைக் கண்டதாக பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் புதன்கிழமை 927.74 புள்ளிகள் (1.53 சதவீதம்) சரிந்து 59,744.98-இல் நிலைபெற்றது. இது, கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதிக்குப் பிந்தைய மிகக் குறைந்த இறுதி நிலை ஆகும்.

சென்செக்ஸ் பட்டியலில் ஒரே ஒரு பங்கு மட்டுமே ஆதாயம் பெற்றது. எஞ்சிய 29 பங்குகளும் இழப்பைச் சந்தித்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ் சரிவு: பிரபல தனியாா் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்குகள் 2.86 சதவீதம் வீழ்ந்து இழப்புப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதையடுத்து எம் அண்ட எம் (2.45 சதவீதம்), பஜாஜ் ஃபின்சா்வ் (2.32 சதவீதம்), ரிலையன்ஸ் (2.28 சதவீதம்) சரிவைக் கண்டன. இவை மட்டுமின்றி ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்டவைகளும் இழப்புப் பட்டியலில் இடம் பெற்றன.

ஐடிசி உயா்வு: துரித விற்பனை நுகா்பொருள் (எஃப்எம்சிஜி) துறையைச் சோ்ந்த ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் மட்டும் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ஆதாயப் பட்டியலில் இடம் பிடித்தன.

நிஃப்டி சரிவு

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 272.40 புள்ளிகள் (1.53 சதவீதம்) சரிந்து 17,554.30-இல் முடிவடைந்தது.

அந்நிய முதலீட்டாளா்கள்

இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய பங்கு முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) கடந்த செவ்வாய்கிழமை ரூ.525.80 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.