ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர லாபம் 29% உயர்வு!
மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 29.13 சதவீதம் அதிகரித்து ரூ.12,370.38 கோடியாக இருந்தது.


மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 29.13 சதவீதம் அதிகரித்து ரூ.12,370.38 கோடியாக இருந்தது.
சமீபத்தில் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி அதன் துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் ஜூலை 1ஆம் தேதி இணைந்தது. இந்த வங்கியானது முந்தைய ஆண்டு காலத்தில் ரூ.9,579.11 கோடியையும், அதற்கு முந்தைய மார்ச் காலாண்டில் ரூ.12,594.47 கோடியையும் நிகர லாபமாகப் பதிவு செய்தது.
ஜூன் 30, 2023 நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 1.17 சதவீதமாக இருந்தது. இது மார்ச் மாத இறுதியில் 1.12 சதவீதமாகவும், முந்தைய ஆண்டில் 1.28 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய மும்பை பங்குச் சந்தையில் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 0.60 சதவீதம் உயர்ந்து ரூ.1,657 ரூபாயாக வர்த்தகமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...