ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விற்பனையில் சாதனை படைத்த ரியல்மீ 11 ப்ரோ சீரிஸ்!

ரியல்மீ நிறுவனத்தில் புதிதாக அறிமுகமாகியுள்ள ரியல்மீ 11 ப்ரோ சீரிஸ் 5 ஜி வகை ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன.

News image
Updated On :19 ஜூன் 2023, 10:13 am

DIN

ரியல்மீ நிறுவனத்தில் புதிதாக அறிமுகமாகியுள்ள ரியல்மீ 11 ப்ரோ சீரிஸ் 5 ஜி வகை ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன.

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் 20 - 30 ஆயிரம் ரூபாய் வரையிலான ஸ்மார்ட் போன் வகைகளில் அதிகம் எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. 

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல்மீ நிறுவனம். ஓப்போ நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் ஸ்மார்ட் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இந்நிலையில், ரியல்மீ 11 ப்ரோ என்ற ஸ்மார்ட் போன் கடந்த 8ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் போன் தற்போது அதிக அளவில் விற்பனையாகி வருவதாக ரியல்மீ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ரியல்மீ நிறுவனத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான விலையுள்ள ஸ்மார்ட் போன்களில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான மாடல் என்ற சாதனையை ரியல்மீ 11 ப்ரோ சீரிஸ் படைத்துள்ளன. இந்த மாடலில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

அதோடு மட்டுமல்லாமல், இணையசேவை நிறுவனமான ஃபிளிப்கார்ட்டில் 20 - 30 ஆயிரம் ரூபாய் வரையிலான ஸ்மார்ட் போன் வகைகளில், ரியல்மீ 11 ப்ரோ சீரிஸ் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. 

ரியல்மீ 11 ப்ரோ 5ஜி விலை 23,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100MP கேமரா, 5000mAh பேட்டரி அம்சம், அதிநவீன Dimensity 7050 5G புராசசர் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.