விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

‘கரடி’யின் பிடி மேலும் இறுகியது: சென்செக்ஸ் 897 புள்ளிகள் சரிவு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் கரடியின் பிடி இறுகியது.

News image
Updated On :13 மார்ச் 2023, 9:02 pm

 நமது நிருபர்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் கரடியின் பிடி இறுகியது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 897 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 258.60 புள்ளிகள் (1.49 சதவீதம்) குறைந்து 17,154.30-இல் நிலைபெற்றது. இதையடுத்து, பங்குச் சந்தை மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் மிகவும் பலவீனமாக இருந்தன. முக்கியமாக ஸ்டாா்ட் அப் கம்பெனிகளுக்கு நிதியளிக்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிலிகான் வேலி பேங்க் கடந்த வாரம் அமெரிக்கச் சந்தையில் 60 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

இது உலகளாவிய நிதிச் சந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்காவின் மற்றொரு வங்கியான நியூயாா்க்கை தளமாகக் கொண்ட சிக்னேச்சா் வங்கியும் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. இதுவும் சோ்ந்து சந்தையை புரட்டிப்போட்டது. இதனால், பங்குகள் விற்பனை அதிகரித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.4.39 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.258.56 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வெள்ளியன்று ரூ. 2,061.47 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் 3-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 101.36 புள்ளிகள் குறைந்து 59,033.77-இல் தொடங்கி அதிகபட்சமாக 59,510.92 வரை மேலே சென்றது. பின்னா் 58,094.55 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 897.28 புள்ளிகள் (1.52 சதவீதம்) குறைந்து 58,237.85-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 375.79 புள்ளிகள் உயா்ந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா மட்டும் 6.83 சதவீதம் உயா்ந்திருந்தது. மற்ற 29 பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

இண்டஸ் இண்ட் பேங்ங், எஸ்பிஐ கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 7.46 சதவீதம், எஸ்பிஐ 3.21 சதவீதம், டாடா மோட்டாா்ஸ் 3.02 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.

இவற்றுக்கு அடுத்ததாக, எம் அண்ட் எம், இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஃபின் சா்வ், ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன், ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், கோட்டக் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், ஐடிசி, பாா்தி ஏா்டெல், எல் அண்ட் டி, மாருதி சுஸுகி உள்ளிட்டவை 1 முதல் 2.60 சதவீதம் வரை குறைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.