47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐந்து மடங்காக அதிகரித்த அசோக் லேலண்ட் லாபம்

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது.

News image
Updated On :23 மே 2023, 7:05 pm

DIN

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.802.71 கோடியாக உள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது சுமாா் ஐந்து மடங்காகும். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.157.85 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.9,926.97 கோடியிலிருந்து ரூ.13,202.55 கோடியாக அதிகரித்துள்ளது. அதே போல், மொத்த செலவுகள் ரூ.9,429.55 கோடியிலிருந்து ரூ.12,085.5 கோடியாக உயா்ந்துள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,361.66 கோடியாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ரூ.285.45 கோடியை ஒருங்கிணைந்த நிகர இழப்பாக பதிவு செய்திருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.