28 ஆண்டுகள் செயல்பட்ட வேர்ட்பேட்... விரைவில் நிறுத்தம்!

வேர்ட்பேட் சேவையை நிறுத்தப்போவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
28 ஆண்டுகள் செயல்பட்ட வேர்ட்பேட்... விரைவில் நிறுத்தம்!
Published on
Updated on
1 min read

வேர்ட்பேட் சேவையை நிறுத்தப்போவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேர்ட்பேட்(WordPad) செயலி விரைவில் நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

வேர்ட்பேட்(WordPad) என்பது ஒரு அடிப்படை டெக்ஸ்ட்-எடிட்டிங் செயலியாகும். இது பயனாளர்கள் வடிவமைக்கப்பட்ட உரையுடன் ஆவணங்களை உருவாக்கவும், திருத்தவும் முடியும். இதில் பிற கோப்புகளுக்கான படங்கள் மற்றும் பிற இணைப்புகளையும் இணைக்கலாம்.

1995 ஆம் ஆண்டு விண்டோஸ் 95 பதிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து, கணினிகளில் இது தானாகவே உள்பொறுத்தப்பட்டிருக்கும் செயலியாக வேர்ட்பேட் உள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது வேர்ட்பேட்(WordPad) பயனர்களுக்கு மாற்றாக மைக்ரோசாஃப்ட் வேர்ட்(Microsoft Word) பயன்பாட்டையும், ரிச் டெக்ஸ்ட் வடிவம் (Rich Text Format) தேவையில்லாதவர்களுக்கு நோட்பேடையும் (Notepad) பரிந்துரைக்கிறது.

வேர்ட்பேட்(WordPad)இனி புதுப்பிக்கப்படாது என்றும், விண்டோஸின் எதிர்கால புதிய பதிப்பு வெளியீட்டில் வேர்ட்பேட் நீக்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் இன்று தெரிவித்துள்ளது.

"நாங்கள் .doc மற்றும் .rtf போன்ற ஆவணங்களுக்கு மைக்ரோசாஃப்ட் வார்டை(Microsoft Word) பரிந்துரைக்கிறோம் மற்றும் .txt போன்ற எளிய உரை ஆவணங்களுக்கு நோட்பேடை(Notepad) பரிந்துரைக்கிறோம்" என தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வேர்ட்பேட்(WordPad) அதிக கவனத்தைப் பெறாத காரணத்தாலும், பயனர்கள் மைக்ரோசாஃப்ட் வேர்ட் மற்றும் பிற நவீன செயலிகளை அதிகளவில் பயன்படுத்துவதாலும் வேர்ட்பேடை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நிறுத்தவுள்ளது.

எப்போது  வேர்ட்பேட்(WordPad) செயலி விண்டோஸ் மென்பொருளில் இருந்து நீக்கப்படும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. அடுத்த ஆண்டு புதிய விண்டோஸ் 12 அறிமுகப்படுத்தும் போது நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் தற்போது Windows 11 23H2 புதுப்பிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 21-ல் திட்டமிடப்பட்டுள்ள விண்டோஸ் 11 புதுப்பிப்பு வெளியீட்டு நிகழ்வில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com