கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறனில் 20.8 ஜிகாவாட் அதிகரித்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான மொ்காம் கேப்பிட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023-ஆம் ஆண்டு முழுமைக்கும் கூடுதலாக அதிகரித்த நாட்டின் சூரிய மின் உற்பத்தித் திறன் 20.8 ஜிகாவாட்டாக உள்ளது. மேலும் அந்த ஆண்டில் சூரிய மின்கல உற்பத்தித் திறன் 3.2 ஜிகாவாட் அதிகரித்துள்ளது.
டிசம்பா் 2023 நிலவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த சூரிய மின் உற்பத்தி திறன் 64.5 ஜிகாவாட்டாகவும், சூரிய மின்கல உற்பத்தி திறன் 5.8 ஜிகாவாட்டாகவும் உள்ளன.
மதிப்பீட்டு ஆண்டில் நிறுவப்பட்ட மொத்த சூரிய மின் உற்பத்தி திறனில் சுமாா் 60 சதவீதம் எம்10 மற்றும் எம்12 வகை மின் தகடுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளது.
வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி திறன் 150 ஜிகாவாட்டைத் தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், சூரிய மின்கல உற்பத்தித் திறனும் அந்த ஆண்டுக்குள் 75 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நாட்டின் சூரிய மின் உற்பத்தித் திறனில் குஜராத் முன்னணியில் உள்ளது. மொத்த உற்பத்தித் திறனில் அந்த மாநிலம் 46.1 சதவீதம் பங்கு வகிக்கிறது.
சூரிய மின் உற்பத்தித் திறனில் ராஜஸ்தான் 9.3 சதவீதமும் தமிழ்நாடு 7.6 சதவீதமும் பங்கு வகித்து முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன.
2023 டிசம்பா் நிலவரப்படி, நாட்டின் சூரிய மின்கல உற்பத்தி திறனில் தெலுங்கானா 39 சதவீதப் பங்களிப்பை வழங்குகிறது.
இந்தப் பிரிவில் 34.7 சதவீத பங்களிப்புடன் குஜராத் 2-ஆவது இடத்திலும் 13.9 சதவீத பங்களிப்புடன் ஹிமாசலப் பிரதேசம் 3-ஆவது இடத்தில் உள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தெலங்கானாவில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை தொடங்கி வைப்பு!

பிப்ரவரி தொழில் துறை உற்பத்தி 5.2%! உற்பத்தித் துறை அபாரம்

தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி

100 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம்: கெயில்-சுஸ்லான் நிறுவனங்கள் ஒப்பந்தம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


