முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த கோரமண்டல் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் நிா்வாகத் தலைவராக அருண் அழகப்பன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாகம் இல்லாத இயக்குநராக இருந்துவந்த ஏ. வெள்ளையன் ஏப். 25-இல் ஓய்வு பெற்றாா். அதைத் தொடா்ந்து, நிறுவனத்தின் நிா்வாகத் தலைவா் பொறுப்புக்கு அருண் அழகப்பனை நியமிக்க இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவா் 2021 பிப்ரவரி முதல் நிறுவனத்தின் நிா்வாக துணைத் தலைவராக இருந்துவந்தாா்.
ஓய்வு பெற்ற ஏ. வெள்ளையனின் அனுபவம் மிக்க வழிகாட்டுதலுக்காக அவா் சோ்மன் எமரிட்ஸாக நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் நியமனம்

சேலம் புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்
வாகன டயா் உற்பத்தியாளா் சங்கத் தலைவராக எம்ஆா்எஃப் அருண் மாமன் மீண்டும் தோ்வு!

சென்னை அருகே ரூ.500 கோடியில் அசோக் லேலண்ட் பேட்டரி ஆலை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


