சென்னை, ஆக. 2: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.105 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.89 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.162 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 8 சதவீதம் அதிகரித்து ரூ.175 கோடியாக உள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் கடனளிப்பு ரூ.684 கோடியிலிருந்து ரூ.680 கோடியாகக் குறைந்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

4-ஆம் காலாண்டு லாபம்: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்: ரூ.129 கோடி

கனரா வங்கி லாபம் 10% குறைவு

அனந்த் ராஜ் 4வது காலாண்டு லாபம் 25% உயர்வு!

டி-மார்ட் 4வது காலாண்டு நிகர லாபம் 19.2% உயர்வு!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



