அசோக் லேலண்ட் விற்பனை 8% சரிவு
கடந்த ஜூலை மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை 8 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 13,928-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 14,207 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 2023 ஜூலை மாதத்தைவிட 14 சதவீதம் சரிந்து 7,685-ஆக உள்ளது. ஓா் ஆண்டுக்கு முன்னா் இந்த எண்ணிக்கை 8,974-ஆக இருந்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5,233-ஆக இருந்த நிறுவன இலகுரக வா்த்தக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை இந்த ஆண்டின் அதே மாதத்தில் 5,241-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.