மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

ஓஎன்ஜிசி நிகர லாபம் 15% சரிவு!

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான நிகர லாபம் 15% குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஓஎன்ஜிசி

Published On :

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் நிறுவனம் ஜூன் காலாண்டில், நிகர லாபம் 15% குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

நடப்பு (2024-25) நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.8,938.10 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.10,526.78 கோடியாக இருந்தது என்று நிறுவனம் தனது பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் லாபம் ரூ.9,869.37 கோடியுடன் ஒப்பிடுகையில் இது தொடர்ச்சியாக குறைந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியாளர், எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கிணறுகளைத் தோண்டுவதில் ஏற்பட்ட தோல்வியால் ரூ.1,669.73 கோடி செலவை தள்ளுபடி செய்தது. இது 2023 ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் ரூ.1,015.81 கோடியாக இருந்தது.

ஒரு வருடத்திற்கு முன்பு நிறுவனத்தின் வருவாய் அதன் முதல் காலாண்டில் ரூ.33,814.33 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.35,266.38 இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.