எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது!!

வாரத்தின் கடைசி நாளான இன்று(டிச. 13) பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

News image
Updated On :13 டிசம்பர் 2024, 6:34 am

DIN

வாரத்தின் கடைசி நாளான இன்று(டிச. 13) பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,212.45 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 10.46 மணியளவில், சென்செக்ஸ் 1,079.44 புள்ளிகள் குறைந்து 80,210.52 புள்ளிகளில் இருந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 330.55 புள்ளிகள் குறைந்து  24,218.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது.

இதன்பின்னர் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. காலை 11.55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 283.16 புள்ளிகள் குறைந்து 81,006.80 புள்ளிகளிலும் நிஃப்டி 90.40 புள்ளிகள் குறைந்து  24,458.30 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது.

சென்செக்ஸ் பொருத்தவரை டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இண்டஸ்இண்ட் பேங்க், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எல்&டி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.

பாரதி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.