புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

1.6% பங்குகளை விற்பனை செய்த ஐபிசிஏ லேபாரட்டரீஸ் புரமோட்டர்ஸ்!

ஐபிசிஏ லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் புரமோட்டர்களில் ஒருவரான உஷா மதுகர் சந்துர்கர், நிறுவனத்தின் 1.6% பங்குகளை ரூ.600 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

News image
ஐபிசிஏ லேபாரட்டரீஸ்
Updated On :18 டிசம்பர் 2024, 5:31 pm

DIN

புதுதில்லி: ஐபிசிஏ லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் புரமோட்டர்களில் ஒருவரான உஷா மதுகர் சந்துர்கர், நிறுவனத்தின் 1.6% பங்குகளை ரூ.600 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

மும்பை பங்குச் சந்தையிடம் உள்ள தரவுகளின்படி, உஷா மதுகர் சந்துர்கர் ஐபிசிஏ நிறுவனத்தின் உள்ள 1.6% பங்குகள் அதாவது 40 லட்சம் பங்குகளை விற்றுள்ளார்.

சராசரியாக ஒரு பங்கின் விலை ரூ.1,501.52 என்று நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.600.61 கோடி என தெரியவந்துள்ளது.

சமீபத்திய பரிவர்த்தனைக்குப் பிறகு, ஐபிசிஏ லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் புரமோட்டர்களின் பங்குகள் 46.3 சதவிகிதத்திலிருந்து 44.7 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ஐபிசிஏ லேபாரட்டரீஸ் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 2.68% சரிந்து ரூ.1,511.85 ஆக இன்று நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.