வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இந்தியா சிமென்ட்ஸை கையகப்படுத்த அல்ட்ராடெக் சிமென்ட்ஸுக்கு அனுமதி

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் கையகப்படுத்துவதற்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2024, 9:10 pm

Din

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் கையகப்படுத்துவதற்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளா்கள், முதலீட்டுக் குழுமங்கள், ஸ்ரீ சாரதா லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிட்டெட் ஆகியவற்றிடமிருந்து அந்த நிறுவனத்தின் 37.72 சதவீத பங்குகளையும், பொது கொள்முதல் மூலம் 26 சதவீத பங்குகளையும் கையகப்படுத்த அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் அனுமதி அளிக்கிறது.

அந்த இரு நிறுவனங்களுமே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆகும்.

இந்த அங்கீகாரம் குறித்த விரிவான விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.