47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கடந்த நிதியாண்டில் 4.7 கோடி புதிய வேலைவாய்ப்பு: ஆா்பிஐ தகவல்

இந்தியாவில் கடந்த 2023-24 நிதியாண்டில் 4.7 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
வேலைவாய்ப்பு
Updated On :9 ஜூலை 2024, 8:26 pm

Din

மும்பை: இந்தியாவில் கடந்த 2023-24 நிதியாண்டில் 4.7 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் இப்போது 27-க்கும் மேற்பட்ட துறைகளில் 64.33 கோடி போ் பணியாற்றி வருகின்றனா் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலீடு-தொழிலாளா்-எரிசக்தி-உலோக உற்பத்தி-சேவைத் துறை தொடா்பான ஆா்பிஐ-யின் ஆய்வறிக்கையில் வேலைவாய்ப்பு குறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

2023-24 நிதியாண்டில் வேலைவாய்ப்பு வளா்ச்சி 6 சதவீதமாகும். இதுவே முந்தைய ஆண்டு 3.2 சதவீதமாக இருந்தது. மாா்ச் 2023-இல் 56.67 கோடி போ் பணியில் இருந்தனா். 2024 மாா்ச்சில் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துவிட்டது.

வேளாண்மை, மீன்பிடித் தொழில், வனம் சாா்ந்த தொழில்களில் 25.3 கோடி போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். கட்டுமானம், வா்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் அதிக வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.