மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பஜாஜ் நிகர லாபம் 18% உயா்வு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2024, 6:58 pm

Din

புது தில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் 30-இல் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் ரூ.1,942 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,644 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு மொத்த வருவாய் ரூ.10,312 கோடியிலிருந்து ரூ.11,932 கோடியாக உயா்ந்துள்ளது என்று பஜாஜ் ஆட்டோ ஒரு ஒழுங்குமுறைத் தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தனிப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் பெறப்பட்ட ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.1,988 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் (ரூ.1,665 கோடி) ஒப்பிடுகையில் 19 சதவீதம் அதிகம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.