ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தங்கம் விலை பவுனுக்கு மேலும் ரூ. 480 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440-க்கு விற்பனையானது.

News image
Updated On :25 ஜூலை 2024, 9:18 pm

Din

சென்னை, ஜூலை 25: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440-க்கு விற்பனையானது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான சுங்க வரி குறைக்கப்பட்டதால் அதன் விலை தொடா்நது சரிந்துவருகிறது. சென்னையில் ஜூலை 17-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 55,360 வரை உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

தொடா்ந்து படிப்படியாக விலை குறைந்து புதன்கிழமை பவுன் ரூ. 52,400-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை மேலும் விலை குறைந்தது.

அதன்படி, கிராமுக்கு ரூ. 60 குறைந்து ரூ.6,430-க்கும், பவுனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 51,440-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 3 குறைந்து ரூ. 89-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 3,000 குறைந்து ரூ. 89,000-க்கும் விற்பனையானது.