சாதனை உச்சத்தை எட்டிய பிறகு ஏற்ற இறக்கத்துடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
மும்பை: இந்த வார இறுதியில் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முக்கிய வட்டி விகித முடிவுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 23.12 புள்ளிகள் உயர்ந்து 81,355.84 புள்ளிகளில் நிலைபெற்றது. அமெரிக்க பத்திர லாபம் வருவாய் சரிவைத் தொடர்ந்து காலை நேர வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 575.71 புள்ளிகள் உயர்ந்து 81,908.43 புள்ளிகளை எட்டியதால் முதலீட்டாளர்கள் அதிக அளவில் லாபத்தை பதிவு செய்ய விரும்பினர்.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 1.25 புள்ளிகள் உயர்ந்து 24,836.10 புள்ளிகளில் நிலைபெற்றது. பகல் நேரத்தில், இது 164.9 புள்ளிகள் உயர்ந்து 24,999.75 என்ற புதிய வாழ்நாள் உச்சத்தை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன் & டூப்ரோ, பஜாஜ் பின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இண்டஸ் இண்ட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. அதே வேளையில் பாரதி ஏர்டெல், டைட்டன், ஐடிசி, கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை சரிந்து முடிந்தது.
ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமையன்று) ஏற்றத்துடன் முடிவடைந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ.2,546.38 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.31 சதவீதம் குறைந்து பீப்பாய்க்கு 80.88 டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.