
கோப்புப் படம்.

கோப்புப் படம்.
புதுதில்லி: சர்வதேச சந்தையில் விலைமதிப்பற்ற உலோகங்களின் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தில்லியில் தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,450 ஆக உள்ளது.
இது முந்தைய அமர்விலிருந்து 10 கிராமுக்கு ரூ.72,650 ஆக முடிவடைந்தது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,900 ஆக உள்ளது.
தில்லி சந்தைகளில் ஸ்பாட் தங்கத்தின் விலை (24 காரட்) 10 கிராமுக்கு ரூ.72,450 ஆக வர்த்தகமானது. இது முந்தைய நாள் முடிவை விட ரூ.200 குறைந்துள்ளது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸின் மூத்த ஆய்வாளர் சௌமில் காந்தி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சந்தையான காமெக்ஸில் ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,320 டாலருக்கு வர்த்தகமானது. இது முந்தைய முடிவிலிருந்து 6 டாலர் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தொடர்ந்து தங்கத்தின் தேவை குறைந்ததது. அதே வேளையில் வெள்ளியின் விலையும் அவுன்ஸூக்கு 30.19 டாலராக குறைந்துள்ளது. இது முந்தைய அமர்விலிருந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 30.37 டாலராக முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...