பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ஃபெடரல் வங்கி வருவாய் ரூ.6,732 கோடியாக உயா்வு

ஃபெடரல் வங்கி வருவாய் ரூ.6,732 கோடியாக உயா்வு

News image
Updated On :3 மே 2024, 6:21 pm

Din

தனியாா் துறையைச் சோ்ந்த ஃபெடரல் வங்கியின் வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.6,732 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கி ரூ.906 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.903 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த மாா்ச் காலாண்டில் வங்கியின் நிகர லாபத்தில் பெரிய அளவில் மாற்றமில்லை.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் 23.42 சதவீதம் அதிகரித்து ரூ.6,732 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருவாய் 15 சதவீதம் அதிகரித்து ரூ.2,195 கோடியாக உள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் 24 சதவீதம் அதிகரித்து ரூ.3,721 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் வங்கி ரூ.3,011 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.