நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதானி குழுமத்தின் 5 நிறுவன பங்குகள் கடும் சரிவு!

அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு இருப்பதால், பிரெஞ்சு எரிசக்தி நிறுவனம் டோட்டல் எனர்ஜிஸ், அதானி குழும நிறுவனங்களில் எந்த முதலீடும் செய்யமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

News image

அதானி குழும பங்குகள் 

Updated On :25 நவம்பர் 2024, 4:13 pm

DIN

அதானி மீதான நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து, பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ், இந்திய நிறுவனத்தின் நிறுவனர் லஞ்ச குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை அதானி குழும நிறுவனங்களில் எந்த ஒரு முதலீடுகளையும் செய்ய போவதில்லை என்று கூறியதையடுத்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் 8% சரிந்தது.

கௌதம் அதானியின் வணிக சாம்ராஜ்யத்தில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒருவரான டோட்டல் எனர்ஜிஸ் குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனங்களின் பங்குகளின் ஒரு பகுதியை வைத்திருந்தது.

லஞ்சப் புகார் எதிரொலியால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் விலை சரிவைச் சந்தித்தது. இன்றைய வர்த்தகத்தில் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 8.05% சரிந்து ரூ.967.65 ஆக நிலைபெற்றது. காலை நேர வர்த்தகத்தில் பங்கின் விலை 11% சரிந்து ரூ.932.90 ஐ எட்டியது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்குகள் 3.78% குறைந்து ரூ.624.85 ஆகவும், அதானி பவர் 3.02% குறைந்து ரூ.446.85 ஆகவும், பிஎஸ்இ-யில் என்டிடிவி பங்குகள் 2.07% குறைந்து ரூ.166.60 ஆகவும், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 1.43% குறைந்து ரூ.600.75 ஆகவும் இருந்தது.

இதற்கு நேர்மாறாக அதானி போர்ட்ஸ் பங்குகள் 2.55% உயர்ந்து ரூ.1,166.45 ஆகவும், ஏசிசி பங்குகள் 2.54% உயர்ந்து ரூ.2,142.85 ஆகவும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 1.26% உயர்ந்து ரூ.2,257.65 ஆகவும், அதானி வில்மர் பங்குகள் 1.81% உயர்ந்து ரூ.297.60 ஆகவும், அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 0.88% பங்குகள் உயர்ந்து ரூ.505.10 ரூபாயாகவும் முடிந்தது.

பிரெஞ்சு நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் உடனான சூரிய மின்சார விநியோக ஒப்பந்தங்களைப், பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் கௌதம் அதானி மற்றும் இரண்டு நிர்வாகிகள் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், அதானி குழுமம் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்தும், அனைத்து சட்ட உதவிகளையும் நாடுவதாகவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.