பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை!

வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 230 புள்ளிகளும் நிஃப்டி 34 புள்ளிகளும் சரிவுடன் இருந்தன.

News image
கோப்புப் படம்
Updated On :11 அக்டோபர் 2024, 11:16 am

DIN

இந்திய பங்குச் சந்தை நேற்று ஏற்றத்துடம் முடிந்த நிலையில், இன்று (அக். 11) சரிவுடன் நிறைவடைந்தது. வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 230 புள்ளிகளும் நிஃப்டி 34 புள்ளிகளும் சரிவுடன் இருந்தன.

வாரத்தின் இடையில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இரண்டாவது வாரமாக பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடனே காணப்பட்டன.

சரிவுடன் தொடங்கிய வணிகம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 230.05 புள்ளிகள் சரிந்து 81,381.36 புள்ளிகளாக நிலைப்பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.28 சரிவாகும்.

வணிக நேரத் தொடக்கத்தில் 81,478.49 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ்,

81,304.15 புள்ளிகள் வரை சரிந்தது. இன்றைய அதிகபட்ச உயர்வே 81,671 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 15 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 15 நிறுவனப் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

டிசிஎஸ் பங்குகள் சரிவு

அதிகபட்சமாக எச்சிஎல் நிறுவனப் பங்குகள் 1.72% உயர்ந்திருந்தன. அதற்கு அடுத்தபடியாக டெக் மஹிந்திரா 1.69%, எச்யூஎல் 1.04%, இன்ஃபோசிஸ் 0.84%, டைட்டன் கம்பெனி 0.79%, சன் பார்மா 0.76%, எல்&டி 0.65%, டாடா ஸ்டீல் 0.59% பங்குகள் உயர்ந்திருந்தன.

மேலும், எம்&எம் -1.88%, டிசிஎஸ் -1.85%, ஐசிஐசிஐ வங்கி -1.65%, மாருதி சுசூகி -1.30%, பவர் கிரிட் -1.29%, ஆக்சிஸ் வங்கி -1.00%, ஐடிசி -0.79%, ஏசியன் பெயின்ட்ஸ் -0.72% சரிந்திருந்தன.

டாடா பங்குகள் நேற்று பெரும்பாலும் அதிகரித்திருந்த நிலையில், இன்று டிசிஎஸ் உள்ளிட்டவை சரிவைச் சந்தித்தன.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 34.20 புள்ளிகள் குறைந்து 24,964.25 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.14% சரிவாகும்.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் நிஷா மார்டின் 15%, பாந்தன் வங்கி 12%, நிப்பான் லைஃப் 9.20%, திரிவேனி டர்பைன் 6.89%, நியூவெப் டெக்னாலஜிஸ் 6.84%, நெட்வொர்க்18 6.69%, பிஎஸ்இ 6.65%, சொனாட்டா சாஃப்ட்வேர் 6.16% பங்குகள் உயர்ந்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.