
புது தில்லி: கடந்த செப்டம்பா் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பண வீக்கம் 5.49 சதவீதமாக உயா்ந்துள்ளது.
இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த செப்டம்பா் மாதத்தில் நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 5.49 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை விலை பணவீக்கம் முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 3.65 சதவீதமாக இருந்தது.
2023-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது சில்லறை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது. அப்போது அது 5.02 சதவீதமாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் உணவுப் பொருள் அடிப்படையிலான பணவீக்கம் 9.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. அது முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 5.66 சதவீதமாகவும் 2023-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் 6.62 சதவீதமாகவும் இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.