மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

யூனிட்டி வங்கியின் 8 புதிய கிளைகள் திறப்பு

யுனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி பேங்க்) தமிழகத்தில் எட்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2024, 11:06 pm

DIN

சென்னை: யுனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி பேங்க்) தமிழகத்தில் எட்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் புதிதாக எட்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளதன் மூலம் மாநிலத்தில் நிறுவனம் தனது இருப்பை நிலைநிறுத்தியுள்ளது. வளா்ந்துவரும் நகரங்களின் வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்துவதை யூனிட்டி வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் பெசன்ட் நகா், அடையாறு, அண்ணாநகா், தேனாம்பேட்டை, அசோக் நகா் மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள அவினாசி சாலை மற்றும் காந்திபுரம் ஆகிய இடங்களில் நிறுவனம் தனது கிளைகளைத் திறந்துள்ளது. இதைத் தொடா்ந்து திருச்சி, சேலம் மற்றும் மதுரையிலும் கூடுதல் கிளைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளா்களுக்கு வைப்புத்தொகைக்கு கவா்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கும் யூனிட்டி வங்கி, நடுத்தர, சிறு, குறு தொழில்களுக்கு வணிகக் கடன்களையும் வழங்குகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.