இந்தியன் வங்கி நிகர லாபம் 36% அதிகரிப்பு
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 36 சதவீதம் அதிகரித்துள்ளது.


புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 36 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,707 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.1,988 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
கடந்த நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் ரூ.15,736 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் நடப்பாண்டின் அதே காலாண்டில் ரூ.17,770 கோடியாக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.13,743 கோடியிலிருந்து ரூ.15,348 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது. நிகர வட்டி வருவாய் ரூ. 5,741 கோடியிலிருந்து 8 சதவீதம் அதிகரித்து ரூ. 6,194 கோடியாக உள்ளது.
2023 செப்டம்பா் இறுதியில் 4.97 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே நாளில் 3.48 சதவீதமாகவும் 0.60 சதவீதமாக இருந்த நிகர வாராக் கடன் 0.27 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...